முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்க கோரி அவரது தாயார் அற்புதம்மாள் முதலமைச்சரிடம் மனு அளித்துள்ளார்.
தந்தை குயில்தாசன் உடல்நிலைக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பேரறிவாளன் கோரிக்கை மனு அளித்தார். அவரது கோரிக்கையைப் பரிசீலனை செய்த தமிழக அரசு, நிபந்தனையுடன் பேரறிவாளனை ஒரு மாத பரோலில் விடுவித்தது.
இதையடுத்து, பரோலில் விடுதலை ஆன பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் தங்கி இருக்கிறார். பின்னர், பரோலை நீட்டிக்கக்கோரி தமிழக அரசுக்குப் பேரறிவாளன் மீண்டும் கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கியது.
இந்நிலையில், பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்க கோரி அவரது தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் மனு அளித்துள்ளார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது கணவர் மற்றும் மகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ளபோது மகன் பேரறிவாளன் உடனிருந்தால் உறுதுணையாக இருக்கும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
தருமபுரி: மர்மமான முறையில் உயிரிழந்த மக்னா யானை... வனத்துறையினர் விசாரணை!
கேரள ஆளுநர் ஆரிப்முகமது கான் தனது மகனுடன் சபரிமலையில் தரிசனம்
தடுப்பூசி திருவிழா: இந்தியாவில் ஒரேநாளில் 27 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை
கோயம்பேட்டில் சிறு குறு வியாபாரம் அனுமதிக்கப்படுமா? இன்று பேச்சுவார்த்தை