திருடுவதற்காகவே வாடகைக்கு வீடு: குடும்பத்துடன் திருட்டு தொழிலில் ஈடுபட்டவர்கள் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அறந்தாங்கியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், திருட்டு தொழில் செய்வதற்காகவே குடும்பத்துடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.


Advertisement

அறந்தாங்கி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள 14 வீடுகளில் தொடர் திருட்டு நடைபெற்று வந்த நிலையில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து விசாரித்தனர். அதில், தொடர் திருட்டில் ஈடுபட்டு காவல்துறையை திணறடித்து வந்தது 17 வயது சிறுவன் நாகராஜ், மற்றும் அவரின் அக்கா கணவர் சுரேஷ் என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் மேலும் விசாரித்ததில், சிவகங்கை மாவட்டம் கால்வாய் பொட்டலை சேர்ந்த இவர்கள், திருட்டு தொழில் செய்வதற்காகவே குடும்பத்துடன் அறந்தாங்கி எழில் நகரில் வாடகைக்கு வீடு எடுத்தும் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

திருட்டு வழக்கில் சிறுவன் நாகராஜின் நண்பர் சக்திவேல், அம்மா‌ சாந்தி, சகோதரி யசோதா ஆகிய மூவரும் கைதாகி சிறையில் உள்ள நிலையில் மீதமுள்ள இருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement