JUST IN

Advertisement

ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாச‌ன் சந்தேகம் எழுப்பியுள்ளார். சிகிச்சையின் போது ஜெ‌யலலிதா இட்லி சாப்பிட்டார் என்று மக்கள‌ நம்ப வைப்பதற்காகவே பொய் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.


Advertisement

மதுரையில் விழா ஒன்றில் பேசிய அவர், 'உங்களிடம் பெரிய மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்காகவே, ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, அவர் இட்லி சாப்பிட்டார் என சொன்னோம். யாருமே அவரை பார்க்கவில்லை. வீட்டில் குடும்ப சண்டை வரும். அதேபோல் அதிமுக கட்சியின் ரகசியம் வெளியே சென்றுவிடக் கூடாது என்பதற்காகவே அனைவரும் சேர்ந்து பொய் சொன்னோம். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இதுதான் உண்மை. ஆளுநர், ராகுல்காந்தி, அமித் ஷா, அருண் ஜெட்லி உள்பட எல்லோரும் அப்போலோ வந்தனர். ஆனால் யாருக்கும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதி கிடையாது. ஜெயலலிதாவை யாரும் பார்த்துவிட்டால், என்ன நடக்கிறது என்பதை வெளியே சொல்லிவிடுவார்கள் என நினைத்துதான் அவரை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. இதுதான் என் சந்தேகம். எனவே தான் முதலமைச்சர் பழனிசாமி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்துள்ளார்’ என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement