[X] Close >

எதிர்க்கட்சிகளை எதிரிகளாக பார்ப்பதில்லை... முதலமைச்சர் பன்னீர்செல்வம்

o-panneerselvam-said--opposition-parties-are-not-enemies

எதிர்க்கட்சிகளை எதிரிகளாக பார்ப்பதில்லை என்றும் எதிரே இருந்து ஆளும்கட்சியின் திறமைகளை தட்டி எழுப்பி வளர்ப்பவர்களாகத் தான் பார்ப்பதாகவும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் பதிலுரைத்த அவர் இதனை தெரிவித்தார்.


Advertisement

வறட்சி காரணமாக அனைத்து விவசாயிகளும் செலுத்த வேண்டிய நிலவரி முழுவதையும் தள்ளுபடி செய்துள்ளதாக கூறியுள்ள முதலமைச்சர், கூட்டுறவு மற்றும் வணிக வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன், மத்திய காலக்கடனாக மாற்றிமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பயிர்காப்பீட்டுக்காக இந்தாண்டு மாநில அரசின் சார்பாக 410 கோடி ரூபாய் ப்ரீமி‌யம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். வங்கிக்கணக்கு உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டு, ஒரே சமயத்தில் விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close