நீட் விவகாரத்தில் இந்த நிலைக்கு திமுக, காங்கிரஸ்தான் காரணம்: தம்பிதுரை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முந்தைய திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது எனவும், முந்தைய அரசுகள் செய்த தவறை சரிசெய்யத்தான் போராடிக் கொண்டிருப்பதாகவும் மக்களவை துணை சபாநாயகரும், அதிமுகவின் மூத்த தலைவருமான தம்பிதுரை கூறியுள்ளார்.


Advertisement

நீட் தேர்விலிருந்து ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததால், தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் உடனடியாக மருத்துவ கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, “நீட் விவகாரத்தில் விலக்கு பெற முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பலமுறை வலியுறுத்தினார். தமிழக அரசு சார்பிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் விவகாரம் உச்சநீதிமன்றத்திற்கு சென்றுவிட்டதால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தலைவணங்கி செயல்படுத்துவது தான் அரசின் கடமை. எதிர்காலத்தில் வாதாடி ஏதாவது செய்ய பரிசீலனை செய்யப்படும். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவுக்கு மத்திய அரசு இதுவரை பதில் தரவில்லை. முந்தைய திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. முந்தைய அரசுகள் செய்த தவறை சரிசெய்யத்தான் போராடிக் கொண்டிருக்கிறோம். தற்போது நீட் தேர்வு அடிப்படையில்தான் கலந்தாய்வு நடத்த வேண்டும் என வழக்கு தொடர்ந்தவர் கூட காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவரே. நீட் விவகாரத்தில் கூட்டாட்சி தத்துவப்படி தமிழக அரசு தொடர்ந்து போராடியது. மத்திய அரசையும் குறை சொல்ல விரும்பவில்லை. அவர்களும் நம்மை ஏமாற்றவில்லை. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க பிரதமர் மோடியும் முடிவு செய்திருந்தார். ஆனால் முடியவில்லை. நீட் விவகாரத்தில் தமிழக மாணவர்களின் பாதிப்பிற்கு அதிமுக அரசு எந்த வகையிலும் காரணம் ஆகாது” என்றார்.


Advertisement

இதுகுறித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “நீட் விவகாரத்தில் விலக்கு பெற, சட்ட ரீதியிலான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும். அதன்படி நீட் தேர்வு அடிப்படையில் நாளை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். நாளை மறுதினம் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். அதற்கு அடுத்த நாள் அதாவது 25 ஆம் தேதி முதல் பொது மருத்துவ கலந்தாய்வு நடைபெறும்” என்றார்.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement