நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்த கேரள எம்.பி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், நாடாளுமன்றத்தில் கேரளாவைச் சேர்ந்த எம்.பி ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


Advertisement

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளிலும் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.

கூட்டத்தொடரில் பங்கேற்ற கேரள மாநிலம் மலப்புரம் மக்களவை தொகுதி உறுப்பினர் இ.அகமது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். உடல் நிலை மோசமாகியதால் அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement