[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

நவ. 16இல் இலங்கை அதிபர் தேர்தல் : ஆணையம் அறிவிப்பு

sri-lanka-s-presidential-election-on-nov-16-election-commission

இலங்கையில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 16 ஆம் தேதி நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிபர் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையர் மஹிந்த தேஷப்ரியா தெரிவித்துள்ளார். அத்துடன், அக்டோபர் 7 ஆம் தேதி அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும் எனவும் அவர் கூறினார். மேலும், தேர்தல் அறிவிப்பு தொடர்பான ஆணை இன்று இரவு அரசிதழில் வெளியாகும் என அவர் தெரிவித்தார்.

முன்னதாக, இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் இலங்கை சுதந்திர கட்சி தங்களது அதிபர் வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close