[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்!

us-ice-cream-vendor-impresses-indians-with-his-fluent-telugu

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தெலுங்கில் சரளமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

இசாக் ரிச்சார்ட்ஸ் என்ற இளைஞர் அமெரிக்காவில் உள்ள ஒரு ஐஸ் கிரீம் கடையில் வேலை பார்த்து வருகிறார். ஐஸ் க்ரீம் வாங்கச்சென்ற ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர்கள் இசாக் ரிச்சார்ட்டிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர். அவர்கள் தெலுங்கு என அறிந்த இசாக் அவர்களிடம் சரளமாக தெலுங்கில் பேசியுள்ளார். 

அமெரிக்க இளைஞரிடம் சற்றும் எதிர்பாராத ஆந்திர இளைஞர்கள் வாயடைத்து வியந்தனர். தான் 2016 முதல் 2018 வரை ஆந்திராவின் விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் வசித்ததாகவும் அப்போது தெலுங்கு மொழி கற்றதாகவும் இசாக் தெரிவித்துள்ளார். 


சரளமாக தெலுங்கு பேசும் இசாக்கின் வீடியோவை ஒருவர் சமூக வலைதளங்களில் பகிர அது தற்போது அது வைரலாகி வருகிறது. 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close