[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

குழந்தையை காப்பாற்ற ‘சூப்பர் உமென்’ஆக மாறிய தாய் - வைரல் வீடியோ

woman-saves-kid-after-he-falls-through-fourth-floor-railing

4வது மாடி பால்கனியில் தவறி விழ இருந்த குழந்தையை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய தாய்க்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

கொலம்பியாவின் மெடலின் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் 4வது மாடியில் ஒரு தாயும், அவரது குழந்தையும் லிப்டில் இருந்து வெளியே வந்துள்ளனர். தாய் போனில் பேசிக்கொண்டிருக்க, மாடியில் இருந்து எட்டிப்பார்க்க முயற்சி செய்த அந்தக் குழந்தை கைப்பிடி ஓட்டை வழியாக வெளியே விழுந்துள்ளது. 

இதனைக் கடைசி நொடியில் கண்ட தாய் துரிதமாக செயல்பட்டு குழந்தையின் கால்களைப் பிடித்து காப்பாற்றினார். உடனடியாக அருகே நின்றவர்கள் தாய்க்கு ஆறுதல் கூறியும், கைத்தட்டி தாயை பாராட்டியும் உள்ளனர்.

அந்தக் கட்டடத்தில் வைக்கப்பட்ட சிசிடிவியில் பதிவான இந்தக்காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. குழந்தையை காப்பாற்றிய தாய்க்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அடுக்குமாடி கட்டடம் மேலும் பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close