[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு
  • BREAKING-NEWS மருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்
  • BREAKING-NEWS அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்
  • BREAKING-NEWS பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் டெல்லியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்திப்பு

அமெரிக்க பல்கலையில் மாணவர் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு, 4 பேர் படுகாயம்!

2-dead-after-shooting-on-campus-of-the-university-of-north-carolina

அமெரிக்காவில், பல்கலைக்கழத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் பல்கலைக்கழகம் ஒன்று உள்ளது. நடப்பு கல்வியாண்டின் கடைசி நாளான நேற்று மாணவர்கள் மகிழ்ச்சியாக வகுப்பறையில் இருந்தனர். அப்போது அங்கும் படிக்கும் 22 வயது மாணவரான டிரிஸ்டான் ஆண்ட்ரு டெர்ரல் என்பவர், திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர்கள் அலறியடித்து அங்கும் இங்கும் ஓடினர். உடனடியாக அங்கு வந்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மாணவர்கள் 2 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

பல்கலைக்கழகத்தில் இருந்து கைகளை தூக்கிய படி மாணவர்கள் பதற்றத்துடன் மாணவர்கள் வெளிவரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக, அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close