யுத்த பத்திரிகையாளர் மேரி கால்வினின் இறப்பு மிகப்பெரிய கொலை என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜுரணிக்கமுடியாத குற்றத்துக்காக அஸ்சாத் அரசு 302 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாக செலுத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதும் யுத்த களங்களில் தன் பாதங்களை பதித்து உண்மைகளை வெளிக்கொண்டு வந்தவர் பத்திரிகையாளர் மேரி கால்வின். அமெரிக்காவில் பிறந்த கால்வின் இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளிநாட்டு செய்தியாளராக பணியாற்றினார். எத்தனையோ நாடுகளுக்கு சென்று போரின் கோரத்தை உலகுக்கு வெளிக்கொண்டு வந்த கால்வின் சிரியாவில் நடந்த போரினைப் பற்றி செய்தி சேகரிக்க சென்றிருந்தபோது 2012ம் ஆண்டு கொல்லப்பட்டார்.
சிரியாவின் ஹொம்ஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் கால்வினும், புகைப்பட கலைஞர் ரெமியும் கொல்லப்பட்டனர். சிரியாவின் மக்களுக்கு எதிராக போர் நடத்திய அதிபர் அல்-அஸ்சாத்ன் படைகள் தான் கால்வினை குறி வைத்து கொலை செய்ததாக பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் கால்வின் விபத்தில் இறந்ததாக சிரிய அரசு தெரிவித்தது. கால்வினின் இறப்பு தொடர்பான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஏமி பெர்மான் ஜாக்சன் தீர்ப்பளித்துள்ளார். அதில் கால்வினின் இறப்பு மிகப்பெரிய கொலை என தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஜுரணிக்கமுடியாத குற்றத்துக்காக அஸ்சாத் அரசு 302 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாக செலுத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கூறியுள்ள அவர், கால்வின் உண்மைகளை வெளிக்கொண்டு வந்ததால் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். மேலும் கால்வினின் சகோதரிக்கு ரூ. 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கால்வினின் சகோதரி, என் சகோதரி இறந்து 7 வருடங்கள் ஆனாலும், அவளின் நினைவு இல்லாமல் என் ஒருநாளும் கழிந்தது இல்லை. அபராதமாக வாங்கப்படும் பணம் சிரியாவின் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செலவழிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
2001-ம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்றுக்கொண்டு இருந்த போது செய்தி சேகரிக்கச் சென்ற கால்வின் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் கால்வினின் இடது கண் பாதிக்கப்பட்டது. கால்வினின் வாழ்க்கையை மையமாக வைத்து தி பிரைவேட் வார்' என்ற திரைப்படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ராஜ் தாக்கரே கட்சி எச்சரிக்கை: பாக். பாடகர்கள் பாடிய பாடலை நீக்கியது டி- சீரிஸ்!
சட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்
வந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்? ரயில்வே அமைச்சகம் விளக்கம்
சர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்
காஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !