அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் கடும் குளிரில் யாருடைய துணையுமின்றி அண்டார்டிக்காவை கடந்து சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த 33 வயதாகும் காலின் மற்றும் 49 வயதாகும் ராணுவ அதிகாரி லூயி ரூட் ஆகிய இருவரும், கடந்த நவம்பர் மாதம் 3ஆம் தேதி கடும் குளிர் நிலவும் அண்டார்டிகாவில் பயணத்தை தொடங்கினர். யாருடைய உதவியுமின்றி இவர்கள் தனித்தனியாக பயணம் மேற்கொண்டனர். ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு இவர்களது பயணம் கண்காணிக்கப்பட்டது.
கடந்த 50 நாட்களுக்கும் மேலாக இவர்களின் பயணம் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் இருவரில் காலின் என்பவர் தனது பயணத்தை முடித்துள்ளார். இதன்மூலம் தனி மனிதராக அண்டார்டிகாவில் 600 கிலோ மீட்டர் தொலைவை 54 நாட்களில், கடந்து அவர் சாதனை படைத்துள்ளார். இதேபோன்று 1996-97 காலகட்டத்தில் போர்ஜ் ஓஸ்லண்ட் என்பவர் அண்டார்டிகாவை தனியாளாக கடந்து சாதனைப்படைத்தார். தூங்காமல் தன் இலக்கை நோக்கி பயணித்ததே சாதனைக்கு காரணம் என்று காலின் தெரிவித்துள்ளார். இந்தச் சாதனையை பெருமையாக கருதுவதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாலம் இல்லாத பரிதாபம் - 30 ஆண்டுகளாக அச்சத்துடன் படகில் செல்லும் மக்கள்
“நித்யானந்தா அழைத்தால் ‘கைலாசம்’ செல்லத் தயார்” - ஆர்வத்தில் மடாதிபதி
28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் குஷ்பு - உறுதியானது மீனா கதாபாத்திரம்
பழங்குடியின மக்களின் வாழ்க்கைக்கு போராடிய இளைஞர் - விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு
குடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!