[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

சுட்டெரிக்கும் கோடை வெயில் : பாகிஸ்தானில் 180 பேர் பலி

pakistan-summer-heat-killed-over-around-180-killed

பாகிஸ்தானில் வாட்டி வதைத்து வரும் வெயிலுக்கு இதுவரை 180 பேர் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானில் கடும் வெயில் அடித்து வரும் நிலையில், கராச்சியில் மட்டும் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இங்கு கடந்த நான்கு நாட்களில் மட்டும் 40 முதல் 44 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் ரமலானுக்காக நோன்பு இருக்கும் இஸ்லாமியர்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

பகல் நேரங்களில் வீடுகளுக்குள்ளேயே பொதுமக்கள் முடங்கிக் கிடப்பதால், பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதற்கிடையே வெயிலுக்கு 180 பேர் உயிரிழந்திருக்கும் தகவலை சிந்து மாகாண சுகாதாரத்துறை செயலர் ஃபஸ்லுல்லா மறுத்துள்ளார். மேலும் வெயில் நேரங்களில் மக்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறும் அரசுத் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close