[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
  • BREAKING-NEWS ரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
  • BREAKING-NEWS 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

ஆபாசப்படம் பார்த்து விமான பணிப்பெண்களிடம் சில்மிஷம் - இளைஞர் கைது!

passenger-strips-naked-attacks-stewardess-on-flight-from-malaysia

மலேசியாவிலிருந்து சென்ற விமானத்தில், பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வங்கதேச இளைஞர் கைது செய்யப்பட்டார்.

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து நேற்று வங்கதேசம் சென்ற விமானம் ஒன்றில், மலேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கும் வங்கதேசத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் பயணம் செய்துள்ளார். விமானம் புறப்பட்ட சற்று நேரத்தில் ஆடைகளை கழட்டி அரை நிர்வாணமான அவர், தான் வைத்திருந்த லேப்டாப்பில் ஆபாச படங்களை பார்த்துள்ளார். பின்னர் தனது ஆடையை பின்னால் இருக்கும் மேசையில் வைத்துக்கொள்ளவதாக, அங்கிருந்த விமானப்பணிப்பெண்களிடம் அனுமதி கேட்டுள்ளார். அவர்கள் அதற்கு அனுமதி கிடையாது என்று கூறியுள்ளனர். 

சற்று நேரத்திற்குப் பிறகு மீண்டும் அந்த பணிப்பெண்களிடம் பேச்சுக்கொடுத்த அவர், திடீரென பணிப்பெண்களை பாலியல் சீண்டல்கள் செய்துள்ளார். இதனால் அங்கிருந்த பயணிகள் மற்றும் இதர பணியாளர்கள் அவரை தடுத்து கட்டுப்படுத்தியுள்ளனர். மேலும் அவரது கையை அங்கிருந்த துணிகளால் கட்டி வைத்துள்ளனர். இதையடுத்து விமானம் வங்கதேச தலைநகரமான டாக்காவில் இறங்கியதும் அந்த இளைஞரை விமான நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். அவர்மீது பாதிக்கப்பட்ட பணிப்பெண்கள் மற்றும் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் ஏன் அவ்வாறு நடந்துகொண்டார் என விமான நிறுவனம் சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close