[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நடிகை ஸ்ரீ தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல்
  • BREAKING-NEWS தமிழில் விஜய் நடிப்பில் ஸ்ரீதேவி நடித்து வெளியான புலி திரைப்படமே அவரின் கடைசி படமாகும்
  • BREAKING-NEWS ஸ்ரீதேவியின் மறைவுக்கு தமிழ் மற்றும் இந்தி நடிகைகள் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்
  • BREAKING-NEWS நடிகை ஸ்ரீதேவி திடீர் மாரடைப்பு காரணமாக துபாயில் காலமானார். 
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்
  • BREAKING-NEWS நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனும் விவாதம் தேவையில்லாதது, மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் - நடிகர் சிம்பு
  • BREAKING-NEWS சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர், துணை முதல்வர் சென்னை விமான நிலையம் வருகை

பிரேசிலில் மிகப்பெரிய வங்கிக் கொள்ளை திட்டம் முறியடிப்பு

biggest-bank-heist-in-history-is-foiled-brazil


பிரேசிலில் நடைபெறவிருந்த மிகப்பெரிய வங்கி கொள்ளை திட்டத்தை முறியடித்தனர் காவல்துறையினர். இதனால் வங்கியில் இருந்த கோடிக்கணக்கான பணம் தப்பியது.

பிரேசிலின் சாவோ பாலோ ‌நகரில் உள்ள மத்திய பிரேசில் வங்கியில் இருக்கும் பணத்தை கொள்ளையடிப்பத‌ற்காக ஒரு கும்பல் 1,640 அடி தூரத்துக்கு கடந்த 4 மாதங்களாக சுரங்கம் தோண்டி வந்துள்ளது. வங்கிக்குள் இருக்கும் முக்கிய பணப் பெட்டகம் அருகே வரை சுரங்கம் தோண்டப்பட்ட நிலையில், அதனை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மேலும் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட 16 பேரையும் கைது செய்தனர். ஒருவேளை கொள்ளையர்களின் திட்டம் வெற்றி பெற்றிருந்தால் பிரேசில் வரலாற்றிலேயே இது மிகப் பெரிய கொள்ளைச் சம்பவமாக அமைந்திருக்கும் என அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

காவல்துறையினர் கண்டுபிடித்து அழித்த அந்த சுரங்கத்தில் மரச்சட்டங்கள், மின் இணைப்புகள், பல்வேறு வகையான உபகர‌ணங்கள் இருந்துள்ளன. சுரங்கம் தோண்டும் பணியாளர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களும் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட காவல்துறையினரை அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close