[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மெர்சல் திரைப்பட காட்சிகளை யாருக்காகவும் நீக்கக் கூடாது: நடிகர் சங்கம்
  • BREAKING-NEWS மெர்சலில் சில காட்சிகளை நீக்குமாறு வலியுறுத்துவது அடக்குமுறை அரசியலின் வெளிப்பாடு: கருணாஸ்
  • BREAKING-NEWS மெர்சல் படத்தை வைத்து பலர் மோசமான அரசியலை செய்கின்றனர்: தமிழிசை
  • BREAKING-NEWS சென்சார் செய்த படத்தை திரும்ப சென்சார் செய்ய வாய்ப்பில்லை: எஸ்.வி.சேகர்
  • BREAKING-NEWS கருத்து சுதந்திரம் என்பது படைப்பின் அடிப்படை உரிமை: இயக்குநர் சீனு ராமசாமி
  • BREAKING-NEWS மெர்சல் படம் மூலம் மக்களுக்கு சமூக கருத்துகளை சொன்ன விஜய்க்கு பாராட்டு: விஷால்
  • BREAKING-NEWS பேச்சு, படைப்பு சுதந்திரத்திற்கு திமுக எப்போதும் துணை நிற்கும்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோட்டையில் ஏற்றப்பட்ட தேசிய கொடியில் ஓட்டை
  • BREAKING-NEWS நடிகர் விஜயின் மெர்சல் திரைப்படத்தில் இருந்து 4 காட்சிகள் நீக்க தயாரிப்பு தரப்பு முடிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சலுக்கு இன்று இதுவரை 4 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS தஞ்சை கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி வெளியேறக்கோரி 155 ஆவது நாளாக போராட்டம்
  • BREAKING-NEWS காய்ச்சலால் தொடரும் மரணங்கள்: நேற்று மட்டும் 10 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS திருவள்ளூரில் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த 2,533 வீடுகளுக்கு நோட்டீஸ்: ஆட்சியர்
  • BREAKING-NEWS திண்டிவனத்தில் கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்ட 2 கட்டடங்களுக்கு ரூ.2லட்சம் அபராதம்
உலகம் 23 Sep, 2017 04:06 PM

17 ஆண்டுகளாக வயிற்றில் 12 இன்ச் ரப்பர் குழாயுடன் வாழ்ந்த பெண்!!!

girl-with-12-inch-rubber-tub-in-17-years-old

மருத்துவர்களின் அலட்சியத்தால் பெண் ஒருவர் தன் வயிற்றில் 12 இன்ச் ரப்பர் குழாயுடன் வாழ்ந்து வந்தது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2000 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்துள்ளார்.  அப்போது அவருக்கு உணவளிக்க பயன்படுத்திய 12 இன்ச் ரப்பர் குழாய் அவரின் வயிற்றுக்குள் சென்றுள்ளது. ஆனால், அந்த பெண் சுயநினைவு இன்றி இருந்ததால் இதுகுறித்து அவருக்கு தெரியவில்லை. அதே போல் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் வயிற்றில் இருந்த ரப்பர் குழாயை அகற்ற மறந்து விட்டனர்.

சமீபத்தில் பக்கவாதத்தில் இருந்து குணமடைந்த அப்பெண்ணுக்கு வயிற்றில் 12 இன்ச் ரப்பர் குழாய் இருப்பதை பற்றி எந்த அறிகுறியும் தென்படவில்லை. இயல்பாகவே அனைத்து உணவுகளை உட்கொண்டுள்ளார். அண்மையில் முழு உடல் பரிசோதனைக்கு சென்ற அந்த பெண்ணின் வயிற்றின் குடல் பகுதியில் இருந்த கருப்பு நிற பொருளை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  பின்பு அதனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றி உள்ளனர். அறுவை சிகிச்சை செய்த பின் அவரின் உடல் நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் 17 ஆண்டுகளாக குடல் பகுதியில் இருந்த ரப்பர் குழாயினால் அந்த பெண்ணிற்கு சிறிய பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுதான் வியப்பின் உச்சம். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close