[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

நூற்றாண்டுகள் பல கடந்து ஒலிக்கும் ‘பிக் பென்’ கடிகாரத்திற்கு ஓய்வு

london-s-big-ben-to-go-silent-for-four-years-as-clock-undergoes-repairs

லண்டனின் உள்ள உலகின் மிகப்பெரிய மணிக்கூண்டு கோபுரமான ‘பிக் பென்’ கடிகாரம் புனரமைப்புப் பணி காரணமாக நிறுத்திவைக்கப்பட உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

லண்டன் மாநகரில், தேம்ஸ் நதிக்கரையோரம் அமைந்திருக்கும் வெஸ்ட்மின்ஸ்டெர் அரண்மனையில் ‘பிக் பென்’ கடிகாரம் அமைந்துள்ளது. இந்த அரண்மனையில் தான் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இயங்கி வருகின்றது. புகழ்பெற்ற சின்னமாக விளங்கும் இந்த அரண்மனையில் காலங்கள் பல கடந்து இன்றும் காட்சியளிக்கும் ‘பிக் பென்’ நிறுத்திவைக்கப்படுகிறது.

கடிகாரக்கூண்டு மோசமான நிலையில் உள்ளதால் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதன் காரணமாக ‘பிக் பென்’ கடிகாரத்தை நிறுத்தி வைக்குமாறு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. பராமரிப்புப் பணிகளுக்காக நான்கு ஆண்டுகள் இக்கடிகாரம் நிறுத்திவைக்கப்படும் என தெரியவருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close