[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

பாதுகாப்பு, பயங்கரவாதம் குறித்து மோடி -டிரம்ப் பேச்சுவார்த்தை

modi-trump-conversation

பயங்கரவாதம், பாதுகாப்பு, வர்த்தகம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் ஆலோசனை நடத்தினர்.

அமெரிக்காவின் 45‌-வது அதிபராக கடந்த‌ 20-ஆம் தேதி பதவியேற்ற டிரம்ப், வெளிநாட்டுத் தலைவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு இருதரப்பு உறவு குறித்து பேசி வருகிறார். இதேபோல் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட டிரம்ப், பல்வேறு சவால்களை எதிர்கொள்வதில் அமெரிக்காவும் இந்தியாவும் தோழமையுடன் செயல்படுவதாக தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது வர்த்தகம், பாதுகாப்பு ஆகியவற்றில் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை பலப்படுத்துவது குறித்து இருநாட்டுத் தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர். அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவிற்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, டிரம்ப் அழைப்பு விடுத்தார். இதேபோல் கனடா, மெக்சிகோ, இஸ்ரேல், எகிப்து நாட்டுத் தலைவர்களை ‌தொலைபேசியில் தொடர்புகொண்டு டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close