[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் தோல்வி அடைந்தது
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது குறித்து மாநிலங்களவையில் வாக்கெடுப்பு
  • BREAKING-NEWS மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா
  • BREAKING-NEWS வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா

மனைவியை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை - கலங்கி நிற்கும் மூன்று மகன்கள்

husband-killed-wife-and-get-suicide-in-namakkal

நாமக்கல்லில் மனைவியை வெட்டிக்கொன்றுவிட்டு கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
நாமக்கல் மாவட்டம் கோடங்கிபாளையம் வடக்கு காடு கொட்டாய் பகுதியில் வசித்து வருபவர் சித்தன். இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு மூன்று மகன்கள் ஒரு மகள் உள்ளனர். நான்கு வருடங்களுக்கு முன்பு மகள் இறந்து விட்டார். இதனால் மூன்று மகன்களுடன் வசித்து வந்தனர். சித்தன் மனைவியை காசு கேட்டு  அடித்ததாகவும், மனைவி மீது சந்தேகப் பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பணம் கேட்டு சித்தன் அடித்ததாகவும், பணம் தராததால் மனைவியை வீட்டில் சேர்க்கவில்லை என்றும் தெரிகிறது. இதனால் ஈஸ்வரி அருகில் உள்ள மாட்டு தொழுவத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து மகன்கள் சேர்ந்து ஈஸ்வரிக்கு தனியாக ஒரு கொட்டகை அமைத்து கொடுக்க ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சித்தமன், ஈஸ்வரியிடம் பிரச்னை செய்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சித்தன் மகன்கள் இருந்த வீட்டை வெளியே பூட்டிவிட்டு, தனது மனைவியை அரிவாளால் வெட்டியுள்ளார். தாயின் அலறல் சத்தம் கேட்ட மகன்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர். பின்னர் வீட்டின் மேற்கூரையை பிரித்து மகன்கள் வெளியே வந்தபோது, தாய் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மகன்கள் வருவதற்கு முன்பே சித்தன் சோள காட்டுக்குள் சென்று மறைந்து விட்டதாக கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் சித்தனை தேடி பிடித்தபோது அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மல்லசமுத்திரம் காவல் துறையினர் உடல்களை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியை அரிவாளால் வெட்டி விட்டு, கணவர் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாயையும், தந்தையும் இழந்து மூன்று மகன்களும் தவித்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close