[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

தெலங்கானாவில் தமிழ் ஒலிக்கிறது: ஆளுநர் தமிழிசை பேச்சு

students-to-make-plastic-free-india-tamilisai

தெலங்கானாவில் தமிழ் ஒலிக்கிறது என அம்மாநில ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். 

சென்னை ரெட்டேரியில் தனியார் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நடிகை வரலஷ்மி, திரைப்பட இயக்குநர் கஸ்தூரி ராஜா, தமிழிசை கணவர் சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

விழாவில் தமிழிசை பேசும்போது, மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் பங்கேற்றது மகிழ்ச்சி. காந்திக்கு அடுத்தபடியாக ஹீரோ, ஹீரோயின்கள் மாணவர்கள் தான். அப்துல் கலாமின் 2020 என்ற புத்தகத்தின் படி, பிரதமர் மோடி செயலாற்றி வருகிறார்’ என்ற அவர், நெகிழி இல்லாத இந்தியாவை மாணவர்கள் உருவாக்க வேண்டும் என கூறினார்.

தெலுங்கானாவில் தமிழ் ஒலிக்கிறது எனவும், தமிழகத்தில் தெலுங்கு ஒலிக்கிறது எனவும் தமிழிசை கூறினார். கடுமையாக உழைத்து தேச பற்று இருந்தால், ஆளுநராக அமரலாம் எனவும், மோடி-சீன அதிபர் சென்னையில் சந்திப்பதால் உலக நாடுகளிடையே ஒற்றுமை ஏற்படும் என்ற அவர், காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக 24 ஆட்டோக்களையும், 800 பள்ளி குழந்தைகளுக்கு புத்தக பைகளையும், அயன் பாக்ஸ், 3 தையல் இயந்திரங்களையும் அவர் வழங்கினார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close