[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு
  • BREAKING-NEWS வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

“பள்ளியில் பாடம் கற்பதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குங்கள்”- 6 வயது மாணவி வழக்கு..!

6-year-old-student-filed-complaint-in-chennai-high-court

சென்னையை அடுத்துள்ள மீஞ்சூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை மேம்படுத்தக்கோரி 6 வயது மாணவியும், அவரது தந்தையும் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும் என 6 வயது மாணவி அதிகை முத்தரசியும், அவரது தந்தை பாஸ்கரனும் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த மனுவில், கோயில் ஒன்றை ஒட்டி செயல்பட்டு வரும் பள்ளி வளாகம், பிச்சைக்காரர்கள் ஓய்வெடுக்கும் இடமாகவும், சட்டவிரோத செயல்கள் நடைபெறும் இடமாகவும் பயன்படுத்தப்படுகிறது எனவும், சுகாதாரம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு பள்ளி மாணவ மாணவியருக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் சூழ்நிலை ஏற்படுவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர். பள்ளியை புதுப்பிக்க வேண்டுமென்று கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இருவரும் அரசு அதிகாரியிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன் சேஷசாயி அமர்வு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். அன்றையதினம் அரசு வழக்கறிஞருக்கு உதவும் வகையில் திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, பொன்னேரி கல்வி மாவட்ட அதிகாரி, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அதிகாரி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close