[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS கும்பகோணத்தில்‌ பாதாளச்சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தால் ஆண்டுக்கு 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

வங்கி அருகே பெண்ணிடம் 35 சவரன் நகை கொள்ளை 

jewelry-and-rupees-robbery-in-ambur

ஆம்பூரில் வங்கி அருகே பெண்ணிடம் 35 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

ஆம்பூர் பஜார் கனரா வங்கியில் இருந்து நிர்மலா என்ற பெண் வெளியே வந்துள்ளார். அவர் ஒரு பையில் 35 சவரன் நகையும் 45 ஆயிரம் ரொக்கமும் எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் ஏறியுள்ளார். அப்போது அங்கு வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கீழே 20 ரூபாய் பணம் கிடக்கிறது எனக் கூறி வண்டியில் மாட்டியிருந்த பையை கொள்ளையடித்து சென்றனர். 

இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற நிர்மலா கூச்சலிட்டுள்ளார். அதற்குள் மர்ம நபர்கள் மாயமாகினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close