[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா ? - முதலமைச்சருக்கு ஸ்டாலின் சவால்

dmk-leader-m-k-stalin-challange-to-cm-palanisamy

அதிமுக ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு குறித்து, முதலமைச்சர் எடப்ப‌டி பழனிசாமி 2 நாள்களில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடுகளில் முதலீடுகளைப் பெறப் போவதாகக் கூறிச் சென்ற முதலமைச்சர், வெறுங்கையுடன் திரும்பியிருப்பதாக விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் 2006 முதல் 2010 மார்ச் வரை மட்டும் 46‌,091 கோடி ரூபாய் அந்நிய முதலீடுகள் பெறப்பட்டு, 2 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் 2015, 2019ஆம் ஆண்டுகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் நிலை குறித்து அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார். 

இப்போது போட்டிருப்பதாகக் கூறப்படும் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கதி என்ன ஆகுமோ என்றும் ஸ்டாலின்‌ விமர்சித்துள்ளார். அதிமுக ஆட்சியில் இதுவரை போடப்‌பட்டுள்ள 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி பெறப்பட்ட முதலீடுகள், நிறுவனங்கள், உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் என்பதையெல்லாம் 2 நாள்களில் வெள்ளை அறிக்கையாக வெளியிடத் தயாரா என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அப்படி உண்மையை வெளியிட்டால் ஒரு வாரத்தில் முதலமைச்சருக்கு திமுக சார்பில் பாராட்டு விழா நடத்தத் தயார் என்றும் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close