[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலுக்கு என கேரள அரசு தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு

காவிரியை புத்துயிரூட்ட ஜக்கி வாசுதேவ் பேரணி.. செப்.11-ல் தமிழகம் வருகை..!

jaggi-vasudev-motor-cycle-rally-for-cauvery

ஈஷா மையத்தின் நிறுவனரான ஜக்கி வாசுதேவின் மோட்டார் சைக்கிள் பேரணி செப்.11-ம் தேதி தமிழகம் வர உள்ளது.

தென்னிந்தியாவின் உயிர்நாடியான காவிரி நதிக்கு புத்துயிரூட்டவும் அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ‘காவிரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ளார். இவ்வியக்கம் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் காவிரி வடிநிலப் பகுதிகளில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்வியக்கத்தில் இரு மாநில அரசுகள் மற்றும் மக்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக ஜக்கி வாசுதேவ் 3,500 கி.மீ தூரம் கொண்ட மோட்டார் சைக்கிள் பேரணியை மேற்கொண்டுள்ளார். செப்.3-ம் தேதி தலகாவிரியில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய அவர் குடகு, மடிகேரி, ஹன்சூர், மைரூரு, மண்டியா, பெங்களூரு வழியாக செப்.11-ம் தேதி தமிழகம் வருகிறார்.

செப்.11-ம் தேதி ஓசூர் வரும் அவர் தர்மபுரி, மேட்டூர், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், புதுச்சேரி வழியாக செப்.15-ம் தேதி சென்னை செல்ல உள்ளார். இப்பயணத்தின் நிறைவு நிகழ்ச்சி செப்.17-ம் தேதி கோவையில் நடைபெற உள்ளது. பெங்களூருவில் நாளை (செப்.8) நடக்கும் நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close