[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

தனியார் பள்ளி வகுப்பறையில் மாணவி தற்கொலை !

school-student-suicide-in-classroom

மதுரை கே.புதூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் வகுப்பறை ஒன்றில் பிளஸ் ஒன் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கே.புதூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு இன்று காலை வழக்கம்போல வந்த பிளஸ் ஒன் மாணவி ஒருவர், பள்ளி வகுப்பறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அந்த பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையயே மாணவியின் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close