[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

சென்னை பெண்ணை கடத்தி பணத்தை பறித்து சாலையில் வீசிச் சென்ற கொள்ளையர்கள்..!

28-year-old-chennai-woman-abducted-and-robbed-dumped-on-a-highway

சென்னையை சேர்ந்த 28 வயது பெண் ஒருவரை தங்களது மோட்டார் சைக்கிளில் கடத்திய கொள்ளையர்கள் அவரிடம் இருந்து பணத்தை பறித்ததோடு அப்பெண்ணை நெடுஞ்சாலையில் வீசிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த வியாழன் அன்று இரவு தனது பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். வழக்கமாக ஆட்டோ ஒன்று மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும் சுதா, அதன்பின் அங்கிருந்து தனது வீட்டிற்கு நடந்து செல்வார். அப்படித்தான் நேற்று முன்தினம் இரவு ரெட்ஹில்ஸ்- திருவள்ளூர் சாலையில் இறங்கிய அவர் அதன்பின் வீட்டிற்கு நடந்து செல்ல துவங்கியுள்ளார்.

தெரு வெளிச்சம் சற்று குறைவாக இருந்த அந்தப் பகுதியில் முகமூடியுடன் பைக்கில் வந்த இரண்டு நபர்கள் சுதாவை வழிமறித்துள்ளனர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் நகைகளை கேட்டுள்ளனர். ஆனால் சுதா வேகமாக அலறி அக்கம்பக்க உதவியை நாடியிருக்கிறார். இதனையடுத்து சுதாவை வலுக்கட்டாயமாக தங்களது மோட்டார் பைக்கில் ஏற்றிய அந்த இரு நபர்கள் வேகமாக சென்றுவிட்டனர்.

இதனை அவ்வழியாக சென்ற ஒருவர் பார்த்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த கொள்ளை நபர்களை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே அந்த கொள்ளையர்களோ சுதா வீட்டிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள வண்டலூர்- மீஞ்சூர் சாலை அருகே சுதாவை வீசி விட்டுச் சென்றுள்ளனர். அத்துடன் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதனையடுத்து அப்பக்கம் வழியாக சென்றவரின் உதவியை நாடி, தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லி உறவினரிடம் கூறி அழுதுள்ளார் சுதா. இதனையடுத்து உறவினர்கள் வந்து சுதாவை மீட்டுள்ளனர்.

போலீசார் இதுகுறித்து கூறுகையில், “ ஒரு இளைஞர் தான் எங்களுக்கு சுதா கடத்தப்படுவது குறித்து தகவல் கொடுத்தார். சுதாவிடம் அந்த இளைஞர்கள் பிரச்னையில் ஈடுபடுவதற்கு சற்று முன்னர்தான் அந்த இளைஞரிடம் இருந்து செல்போனை பிடுங்கியிருக்கின்றனர். அதன்பின் சுதாவிடம் பிரச்னை செய்து அவரை கடத்தியிருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close