[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

‘7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது’ - தமிழக அரசு வாதம்

tn-govt-said-high-court-cannot-order-to-governor-for-7-prisons-release

பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தமிழக அரசின் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் அனுப்பியும் ஆளுநர் முடிவெடுக்கவில்லை என நளினி தரப்பில் வழக்கு தொடர்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட நளினி தரப்பு 7 பேரை விடுதலை செய்ய ஆணை பிறக்குமாறு ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது. அப்போது தலையிட்ட தமிழக அரசு வழக்கறிஞர், ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தெரிவித்தார். மேலும், 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் சட்ட ஆலோசனை செய்து வருவதாக கூறினார். இதையடுத்து வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close