[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத ஒதுக்கீடு கேட்டு வழக்கு

the-case-has-filed-in-chennai-high-court-about-27-per-cent-reservation-asking-for-all-india-medical-studies

மருத்துவ படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அனைத்து கல்லூரிகளும் வழங்க  கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் 15 சதவீதமும், எம்டி,எம்எஸ் உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களாக ஒதுக்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டில்,15 சதவீதம் தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கும், 7.5 சதவீதம் பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கும், 27 சதவீதம் பிற்படுத்தப்பட்ட (பொருளாதார ரீதியில் முன்னேறிய பிரிவினர் அல்லாத) பிரிவு மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

Image result for மருத்துவ படிப்பு

ஆனால் மத்திய அரசு கடந்த 2007-ம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்தின்படி, மத்திய அரசு கல்வி நிறுவனங்கள், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அல்லது மத்திய அரசின் உதவி பெறும் கல்வி நிலையங்களில் மட்டுமே பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இந்த இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுகின்றனர். எனவே அந்தந்த மாநிலங்களில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி டாக்டர் ரவீந்திரநாத் சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

Image result for high court of madras

இடஒதுக்கீடு என்பது அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொதுவானது எனும் போது, மாநில அரசு கல்லூரிகளில் அகில ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காதது சட்டவிரோதமானது எனவும், 2008-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் அல்லாத பிற மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் பறிபோய் வருவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த இடஒதுக்கீடு மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்ற இந்திய மருத்துவ கவுன்சில் தகவல் குறிப்பேடு அறிவிப்பாணைகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரியுள்ளார்.  இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close