[X] Close
JUST IN
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலில், இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச முன்னிலை

“எந்த வகையில் மோடி தனித்துவமான தலைவர்?” - ரஜினிக்கு சீமான் கேள்வி

ntk-organizer-seeman-said-about-rajini

நாட்டிலேயே தமிழகத்தில்தான் திரைப்படத்துறையினர் மீது அதிக கவர்ச்சி உள்ளதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

பத்து ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நாம் தமிழர் கட்சி, ஓராண்டே ஆன மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சமமான வாக்குகளை தேர்தலில் பெற்றுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இவ்வாறு கூறினார். நடந்துமுடிந்த தேர்தல் நியாயமாக நடந்ததா? எனக் கேள்வி எழுப்பிய அவர், தாங்கள் போராடுவது எதற்காக என்பதை அறிந்து உணராதவர்களே நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்றார்.

மோடி, தனித்துவமான தலைவர் என நடிகர் ரஜினிகாந்த் கூறியது குறித்து பேசிய சீமான், எவ்வகையில் மோடி தனித்துவம் பெற்றவர் என்பதை ரஜினி தெளிவாக்க வேண்டும் என்றார். குடிநீர் பற்றாக்குறையை போக்க நதிகள் இணைப்பு சரியான தீர்வாகாது என்றும் அவர் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close