[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்; எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது - பிரதமர் மோடி

'பாதாள அறைகளில் இருந்து பணம் கைப்பற்றப்படவில்லை' - லீமா ரோஸ் மார்ட்டின்

leema-rose-martin-said-no-money-seized-from-cell-rooms

தங்களது வீட்டில் கட்டிலுக்கு அடியிலும், பாதாள அறைகளிலும் இருந்து கட்டுக்கட்டாக பலகோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக வெளியாகும் செய்தி உண்மையானது அல்ல என்று லீமா ரோஸ் மார்டின் தெரிவித்துள்ளார். 

லாட்டரி அதிபர் மார்ட்டினை கொல்கத்தா விமான நிலையத்தில் பிடித்த, வருமான வரித்துறை அதிகாரிகள், அவருக்குச் சொந்தமான வீடு, சொகுசு பங்களா, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். கோவை, சென்னை, கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத், கவுகாத்தி, சிலிகுரி உள்ளிட்ட 70 இடங்களில் சோதனை நடைபெற்றது.

ஐந்து நாட்களாக நடைபெற்ற இந்தச் சோதனையின் போது, கணக்கில் வராத 595 கோடி ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள், 619 கோடி ரூபாய் மதிப்பில் முதலீடு செய்யப்பட்டவைக்கான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகத் தெரிகிறது. இதேபோல, கணக்கில் வராத 5 கோடியே 80 லட்சம் ரூபாய் ரொக்கம், சுமார் 24 கோடியே 57லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் வீட்டின் மேற்கூரை, மரப்படிக்கட்டுகளில் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்த வீடியோவையும் கட்டிலுக்கு அடியில் ஆவணங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த காட்சியையும்  வருமான வரித்துறை வெளியிட்டிருந்தது. 

இந்நிலையில், தங்களது வீட்டில் கட்டிலுக்கு அடியிலும், பாதாள அறைகளிலும் இருந்து கட்டுக்கட்டாக பலகோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக வெளியாகும் செய்தி உண்மையானது அல்ல என்று லீமா ரோஸ் மார்டின் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மார்ட்டின் குழும நிறுவனங்கள், ஊழியர்களின் இல்‌லங்கள் மற்றும் தங்கள் வீட்டில் வருமான வரிச்சோதனை நடைபெற்றது என்றும், அதில் 98 ஆயிரத்து 820 ரூபாய் மட்டுமே கைப்பற்றப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து வருமான ‌வரித்துறையினர் வழங்கிய படிவத்தை வெளியிட்டுள்ள லீமா ரோஸ் மார்ட்டின், வீட்டின் கட்டிலுக்கு அடியிலும், பாதாள அறையிலும் பணம் கைப்பற்றப்பட்டதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close