[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.
  • BREAKING-NEWS தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் ரோகித் சர்மா அசத்தல் சதம். போதிய வெளிச்சமின்மை காரணமாக முன்கூட்டியே முடிவுக்கு வந்தது முதல்நாள் ஆட்டம்
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் பரப்புரை ஓய்ந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

வீட்டில் கஞ்சா பதுக்கிய விவகாரம் : காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பணி நீக்கம்

marina-special-police-sub-inspector-dismissed-about-kanja-case

வீட்டில் இரண்டரை கிலோ கஞ்சா பதுக்கி வைத்த விவகாரத்தில் மெரீனா காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை பணி நீக்கம் செய்து காவல் ஆணையர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சுந்தரவடிவேலு. அப்போது இவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை ராயப்புரத்தில் உள்ள அவரது வீட்டில் போலீசார் திடீர் ஆய்வு நடத்தினர். அதில் வீட்டிலுள்ள இரண்டு பைகளில் இரண்டரை கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சுந்தர வடிவேலை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுத்தி சிறையில் அடைத்தனர். பிறகு ஜாமீனில் வெளியே வந்த சுந்தரவடிவேலும் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்தப்பட்டது. 

இதனிடையே சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பணி ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு மெரீனா காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி அமர்த்தப்பட்டார். இந்நிலையில், தற்போது துறை ரீதியிலான விசாரணை முடிந்ததையடுத்து சுந்தரவடிவேலை பணி நீக்கம் செய்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close