[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு
  • BREAKING-NEWS 'பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா ?' - இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி
  • BREAKING-NEWS தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது
  • BREAKING-NEWS ஜூன் 28ல் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்; கிராம சபைக்கூட்டம் முழுமையாக நடைபெற மக்கள் நீதி மய்யம் எப்போதும் திறம்பட செயல்பட வேண்டும் - கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

தொடர் மழை : சென்னை உட்பட 5 மாவட்டங்களில் நாளை விடுமுறை

due-to-rains-chennai-thiruvallur-kanchipuram-thiruvarur-vizhuppuram-and-nagai-schools-holiday

தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் வலுவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், தா‌‌ழங்காடு, கூனிமேடு மற்றும்‌ சுற்றுவட்டார கடலோரப் பகுதிகளில் மழை பெய்தது. வேலூர் மாவட்டத்தில் வேலூர், அரக்கோணம், சோளிங்கர், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்தது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 தினங்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாகவும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழகத்தின் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆவடி, அம்பத்தூர், ‌பெரம்பூர், வியாசர்பாடி, எழும்பூர், கோடம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. எண்ணூர், திருவொற்றியூர், காசிமேடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை கொட்டித்தீர்த்தது. பல்லாவரம், பம்மல், பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. இந்நிலையில் கனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார். 

இதேபோன்று காஞ்சிபுரத்திலும் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். மேலும் திருவாரூரில் பள்ளிகளுக்கு தொடர் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் நிர்மல் ராஜ் அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து விழுப்புரம் மற்றும் திருவள்ளூரிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுரை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுசேரியிலும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தின் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close