[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

முக்கொம்பு அணையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

dmk-chief-stalin-inspects-mukkombu-dam

திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதிகளை எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். 

முக்கொம்பு அணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து மதகுகள் உடைந்து, பாலத்தில் ஒரு பகுதி இடிந்தது. அங்கு சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முக்கொம்பு அணைப் பகுதிகளை பார்வையிட்டார்.

Read Also -> உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு.. விசாரணையில் அம்பலம்..! 

Read Also -> மெரினாவில் போராட்டத்திற்கு அனுமதியில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிகாரிகள் முன்கூட்டியே ஆய்வு செய்து முறையாக தண்ணீர் திறந்துவிட்டிருந்தால் மதகுகள் உடைந்திருக்காது என தெரிவித்தார். சீரமைக்கும் பணிகள் 40 சதவீதம் கூட நிறைவடையவில்லை என குற்றம்சாட்டிய ஸ்டாலின், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றுச் சேரவில்லை என்றும் கூறினார். அனைத்து பணிகளிலும் முறைகேடுகள் நடப்பதாக குறிப்பிட்ட ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் முறைகேடுகள் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார். தமிழக அரசு செயல்படாமல் இருப்பதாகவும் ஸ்டாலின் விமர்சித்தார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close