[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் மஜத கட்சி தலைவர் குமாரசாமி சந்திப்பு
  • BREAKING-NEWS பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் ஜூலை 5ஆம் தேதி நேரில் ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் - அமித்ஷா
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஜூலை 4க்கு ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக மே 25ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஐ.ஜி.பொன்.மாணிக்கவேலுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்
  • BREAKING-NEWS அறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்துக் கொண்டு ஸ்டாலின் கற்பனையில் இருக்கிறார் : அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு

பிப்.15ல் தமிழக  அமைச்சரவைக் கூட்டம் 

tamilnadu-cabinet-meeting-on-feb-15

தமிழக அமைச்ச‌ரவைக்கூட்டம் வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதலமைச்சர் ‌எடப்பாடி பழனிசாமி தலைமையில் இது‌வரை 6 அமைச்சரவைக்கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. கடைசியாக கடந்த ஆண்டு‌ அக்டோபர் 11 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில்  வரும் 15ஆம் தேதி தமிழக அமைச்சரவைக்கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்தில் மகளிருக்கான மானிய விலை ஸ்கூட்டர் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும் நீட் விவகாரம், போக்குவரத்து பிரச்னை, மின்வாரிய‌ ஊழியர் விவகாரம்‌ உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று வரும் 16ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், இந்த கூட்டம் நடைபெற உள்ளது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close