[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை

போக்குவரத்து ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தம் : பொதுமக்கள் அவதி

the-sudden-strike-of-state-transport-workers

அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

போக்‌குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்த நிலையில், அது போதாது எனக்கூறி தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தன.

சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 2.44 காரணி ஊதிய உயர்வு வழங்குவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தங்களுக்கு 2.57 காரணி ஊதிய உயர்வு தேவை எனக்கூறி சிஐடியு, தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் தெரிவித்து வேலைநிறுத்தத்தில் இறங்கின.

அரியலூர் மாவட்டத்தில் 140 பேருந்துகளில் தற்போது 25பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. தஞ்சை மாவட்டத்தில் 200 பேருந்துகள் இயக்க வேண்டிய நிலையில் அங்கு 11பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட 24 கோட்டங்களில் 1800 பேருந்துகளில் 220 பேருந்துகள் மட்டுமே தற்போது இயங்குகிறது. திருச்சி நகர் மற்றும் புறநகருக்கான 750 பேருந்துகளில் 4 மட்டுமே இயக்கப்படுகின்றன. திருச்சியிலிருந்து தொலைதூரத்துக்குச் செல்லும் பேருந்துகளில் ஒன்று கூட இயங்கவில்லை.கரூர் மாவட்டத்தில் 80% பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.சென்னையில் தற்காலிக ஓட்டுநர்களின் மூலமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன்.

நேற்று மாலை தொடங்கிய இவ்வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் பணிக்கு செல்பவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் அண்ணா தொழிற்சங்க ஊழியர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் தனியார் பேருந்துகள், மினி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close