[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

அரசு மருத்துவமனையை பயன்படுத்துங்கள்: அரியலூர் ஆட்சியர் வேண்டுக்கோள்

use-government-hospital-ariyalur-collector-request

அனைத்து வசதிகளும் உள்ள அரசு ‌மருத்துவமனைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் லெட்சுமி ப்ரியா கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த ஒன்றாம் தேதி வயிற்று வலி காரணமாக அரசு மருத்துவமனையில் ஆட்சியர் லெட்சுமி ப்ரியா அனுமதிக்கப்பட்டார். குடல்வால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஆட்சியரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறிய நிலையில், அவருக்கு அன்றிரவே குடல்வால் அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பிய ஆட்சியர், அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளனர் என்றும் அனைத்து வசதிகளும் இருப்பதால் பொதுமக்கள் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இதேபோல், அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், முதலமைச்சர் பழனிசாமியின் குடும்பத்தினர் கூட ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close