[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: எல்லையில் ராணுவ உடையில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார் பிரதமர் மோடி
 • BREAKING-NEWS ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு
 • BREAKING-NEWS நிலவேம்பு கசாயம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் கமலுக்கு அரசு சித்த மருத்துவர்கள் கண்டனம்
 • BREAKING-NEWS 15 நாட்களில் டெங்கு காய்ச்சல் முழுவதும் கட்டுப்படுத்தப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS தீபாவளி டாஸ்மாக் மது விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20%குறைந்தது
 • BREAKING-NEWS வித்தியாசமாக பேச வேண்டும் என்பதற்காகவே நிலவேம்பு கசாயம் குறித்து கமல்ஹாசன் கருத்து கூறியுள்ளார்: இல.கணேசன்
 • BREAKING-NEWS மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும்: தமிழிசை
 • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீரில் காலை 6.40 மணியளவில் நில அதிர்வு- ரிக்டர் அளவு கோலில் 4.7ஆக பதிவு
 • BREAKING-NEWS தஞ்சை மாவட்டத்தில் 34 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஆட்சியர் அண்ணாதுரை
 • BREAKING-NEWS ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து 12,000 கனஅடியில் இருந்து 11,000 கனஅடியாக குறைந்தது
 • BREAKING-NEWS தீபாவளியையொட்டி பட்டாசு வெடிப்பதால் சென்னை நகரம் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது
 • BREAKING-NEWS சென்னை : பட்டாசு வெடித்து தீக்காயமடைந்த 10 பேருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
 • BREAKING-NEWS 68சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேசத்தில் நவ.8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது
 • BREAKING-NEWS இமாச்சலபிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்கு 68 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக
தமிழ்நாடு 12 Oct, 2017 08:59 AM

வறுமையால் தடைபட்ட கல்வி: உதவிக்காக ஏங்கி நிற்கும் மாணவியின் குடும்பம்

poor-student-expect-money-for-her-higher-studies

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1,050 மதிப்பெண்கள் பெற்று பிசியோதெரபி பயின்று வந்த மாணவியின் கல்வி, கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் தடைப்பட்டுள்ளது. இதனால் மாணவியின் குடும்பம் உதவிகரம் கேட்டு நிற்கிறது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பி.என்.பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட தொட்டில்பட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்-தங்கம் தம்பதியினர். வறுமையான குடும்ப சூழலிலும் எப்படியாவது தங்களது இரண்டாவது மகள் நிவேதாவை மருத்துவராக பார்க்க வேண்டும் என்பது அவர்களின் லட்சியமாக இருந்தது. அதற்கேற்ப பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1050 மதிப்பெண்களுடன், 180 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றிருந்ததால் எப்படியும் மருத்துவர் ஆகிவிடலாம் என்ற கனவுடன் இருந்தார் நிவேதா. ஆனால் நீட் தேர்வினால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு பறிபோனதாக வேதனையுடன் தெரிவிக்கிறார் நிவேதாவின் சகோதரி.

இதனால் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிசியோதெரஃபி பாடப்பிரிவில் சேர்ந்துள்ளார் நிவேதா. ஆனால் குடும்ப சக்தியையும் மீறி பணம் தேவைபடுவதால் தற்போது நிவேதாவின் கல்வி தடைபட்டுள்ளது. இதனால் ஆதரவு கரத்தை தேடி நிற்கிறார். சாலையோரத்தில் சிறிய அளவிலான டீ கடை வைத்து தொழில் நடத்தி வரும் மாணவியின் தாயார், தங்களது வருமானம் குடும்ப செலவிற்கே போதுமானதாக இல்லை என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். எனவே, அந்த குடும்பமே தங்கள் பிள்ளையின் மேற்கல்விக்காக கண்ணீர் மல்க உதவிக்காக ஏங்கி நிற்கிறது.

'ஊதுகுழலைக் கையில் எடுக்கும் பெண்கள் எழுதுகோலைக் கையில் எடுக்க வேண்டும்' என்ற கூற்று நனவாக கல்விக்காக ஏங்கும் மாணவிக்கு உதவ முன்வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close