[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ நகை சிக்கியது
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

தேர்தல் ரத்து: தமிழிசை வரவேற்பு, திருமாவளவன் வேதனை

tamilisai-welcomes-thirumavalavan-regrets

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை தமிழக பாஜக தலைவர் தமிழிசை வரவேற்றுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தேர்தல் ரத்து வேதனையளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை மறுநாள் (12-ம் தேதி) இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், நேற்று இரவு ஆர்.கே. நகர் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ரத்து தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு கால தாமதமானது. முன்பே சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார். தேர்தல் ரத்து செய்யப்பட்டது வரவேற்கத் தக்கது எனக் கூறிய அவர், தேர்தல் ரத்து செய்யப்பட்டதில் பாரதிய ஜனதா தலையீடு இல்லை என்றும் அவர் கூறினார்.

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறும்போது, இடைத்தேர்தல் ரத்து அதிர்ச்சியளிக்கிறது; வேதனையளிக்கிறது. தேர்தல் ரத்தால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. எல்லா தேர்தல்களிலும் பணப்பட்டுவாடா நடந்துள்ளது. வெளியூர் ஆட்களை ஆர்.கே. நகரில் இருந்து ஆணையம் அப்புறப்படுத்த முடியாதது வேடிக்கை. கடைசி நேரத்தில் பணப்பட்டுவாடாவை கண்டுபிடித்தது போல், ரத்து செய்தது வேதனை அளிக்கிறது. தேர்தல் நடைமுறையில் சில மாறுதல்களை அரசு கொண்டுவர வேண்டும்’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close