[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா

ஜெயலலிதாவுக்கு நேர்ந்ததுபோல எந்த தலைவருக்கும் நேர்ந்ததில்லை: ஓபிஎஸ் அணி

ops-supporters-press-meet

ஜெயலிதாவுக்கு நேர்ந்தது உலகின் எந்த தலைவருக்கும் நேர்ந்ததில்லை என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசு உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வரும் 8ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த போராட்டத்துக்கு அனுமதி கோரி சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இன்று மனு அளித்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, ஜெயலலிதாவுக்கு நேர்ந்தது உலகில் எந்த தலைவருக்கும் நேர்ந்ததில்லை. அவரது மரணத்தில் இருக்கும் மர்மங்களை வெளிக்கொணர மத்திய அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி 8ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி கோரி டிஜிபியிடம் மனு அளித்துள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் என்று தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close