[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

முகநூலில் கருத்துக்களை பதிவு செய்திருப்பதாக வந்த செய்தி முற்றிலும் தவறானது: மு.க.அழகிரி தகவல்

i-do-not-have-a-facebook-account-m-k-azhagiri

முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்ததாக வெளியான செய்தி தவறானது என்றும், தமக்கு முகநூல் பக்கம் இல்லை என்றும் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாலை நாளிதழ் ஒன்றில் நேற்று மாலை, முகநூல் பக்கத்தில் தாம் கருத்துக்களை பதிவு செய்துள்ளதாக வந்த செய்தி முற்றிலும் தவறானது என கூறியுள்ளார். தமக்கு முகநூல் பக்கம் இல்லை என்றும், தாம்‌அப்படியொரு செய்தி கொடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை முற்றிலும் மறுப்பதாக, மு.க.அழகிரி கூறியுள்ளார்.

முன்னதாக, திமுக பற்றி கருத்து சொல்ல நீ யார் என,என்னை யாரும் கேட்க முடியாது. ஏனெனில், இந்த கட்சிக்காக மற்றவர்களை விட நான் கூடுதலாக உழைத்துள்ளேன். பலமுறை சிறை சென்றுள்ளேன்.

நான் தவறு செய்துள்ளேன் என்று சொன்னால், அது கட்சிக்காக நடந்த தவறாகவே இருக்கும். இப்படித்தான், கட்சி மீது நான் பற்றுதலோடும், விசுவாசத்தோடும் இருந்திருக்கிறேன். அதனால் கட்சியைப்பற்றி கவலைப்படவும், தவறாக செல்லும் போது கேள்வி கேட்கவும் எனக்கு உரிமை உள்ளது” என மு.க.அழகிரியின் முகநூல் பக்கத்தில் கருத்து பதிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close