[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் சந்திக்கவுள்ள மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் மனு
  • BREAKING-NEWS சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு. பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்.
  • BREAKING-NEWS 7 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்புகிறார் கருணாநிதி

dmk-chief-karunanidhi-return-to-home-today

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி இன்று வீடு திரும்புகிறார்.

தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக சென்னை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 15-ஆம் தேதி இரவு திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறலுக்காக கருணாநிதிக்கு ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. கருணாநிதி நலமுடன் நாற்காலியில் அமர்ந்து டிவி பார்க்கும் புகைப்படத்தையும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்புகிறார். இதனால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close