[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி ப‌யணம்.. பிரதமரிடம் புயல் நிவாரண நிதி கோர திட்டம்

tn-cm-today-meets-pm-modi

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தலைநகர் டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடியை சந்திக்கும் அவர், தமிழகத்திற்கு வர்தா புயல் நிவாரண நிதியை உடனடியாக ஒதுக்குமாறு வலியுறுத்துவார் எனத் தெரிகிறது.

வங்கக் கடலில் உருவான வர்தா புயல் கடந்த திங்கட்கிழமை சென்னை அருகே கரையை கடந்தது. அப்போது சென்னையில் பலத்த காற்று வீசியதுடன் கனமழையும் கொட்டியது. சென்னையில், புயலால் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தலைநகர் டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடியைச் சந்திக்கும் அவர், தமிழகத்திற்கு வர்தா புயல் நிவாரண நிதியை உடனடியாக ஒதுக்குமாறு வலியுறுத்துவார் என்று தெரிகிறது. மேலும், தமிழகத்தில் புயல் சேதங்களை மதிப்பிட மத்தியக் குழுவை அனுப்ப வேண்டும் என்று பிரதமரிடம் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, தமிழகத்திற்கு வர்தா புயல் சேதங்களுக்காக இடைக்கால நிவாரண நிதியாக 1000 கோடி ரூபாயை உடனே தருமாறு கடிதம் வாயிலாக பிரதமரிடம் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close