[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS சென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது
  • BREAKING-NEWS தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை

சென்னை பசுமையை சூறையாடிய வர்தா

varta-storm-greenery-ravaged-chennai

வர்தா புயல் காரணமாக சுமார் 3 ஆயிரம் மரங்கள் விழுந்ததால் சென்னை மாநகரம் பசுமை இழந்து நிற்கிறது.

அதிதீவிரப் புயலான வர்தாவிற்கு சென்னை மரங்கள் மீதுதான் கோபம் என நினைக்கும் அளவுக்கு நகரமெங்கும் மரங்கள் விழுந்து கிடக்கின்றன. மரங்கள் அதிகமுள்ள அடையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் ஒர‌ளவு மரங்கள் தென்படக்கூடிய பிற பகுதிகளிலும் மரங்களை வர்தா புயலின் சீற்றம் வீழ்த்திச் சென்று விட்டது. தாக்கு‌ப் பிடித்த மரங்களும் கிளைகள் உடைந்து கிடக்கின்றன. சென்னையின் சாலைகள் விழுந்து போன மரங்களின் இலைகள் நிரம்பிக் காட்சி அளிக்கின்றன. விழுந்து விட்ட ஆயிரக்கணக்கான மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடந்து வரும் நிலையில், அவற்றை அகற்றிய பிறகு சென்னையின் பல பகுதிகளின் தோற்றமே வெறிச்சென்று காணப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு உள்ளிட்ட சில மாநகரங்களை ஒப்பிடுகையில் சென்னையில் நிழல் மற்றும் ஆக்சிஜனைத் தரும் மரங்கள் எண்ணிக்கை குறைவே என்று பலரும் கூறி ‌வந்தனர். இந்த நிலையில், வர்தா புயலின் சீற்றத்துக்கு ஏராளமான மரங்கள் பலியாகி விட்டதால், இனி சென்னையின் பசுமை குறையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தப் புயலில் சுமார் 3 ஆயிரம் மரங்கள் விழுந்ததுள்ளன. எனவே, விழுந்த மரங்களை அகற்றுவதுடன் நிற்காமல், அந்த இடங்களில் மரக்கன்றுகளை உடனடியாக நட்டு வளர்க்க வேண்டியது அவசியமாகிறது. அரசும் தன்னார்வ அமைப்புகளும் மரக் கன்றுகளை நட்டு, பாதுகாக்க ஆர்வம் காட்ட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த மரங்களின் இழப்பு வரும் கோடை காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் மரங்கள் இல்லாததால் கோடையில் வெப்பநிலை அளவு அதிகரிக்கும் என்றும் கூறுகிறார்கள் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்.

கிண்டி சிறுவர் பூங்காவை புரட்டிப்போட்ட ‘வர்தா’

சென்னை மாநகரின் பொழுது போக்கிற்கான முக்கிய இடங்களில் கிண்டி சிறுவர் பூங்காவும் ஒன்று. இந்த பூங்காவின் இயற்கை சூழலை கண்டு ரசிக்கவே விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்வர். நேற்று சென்னையையே புரட்டிப்போட்ட வர்தா புயல் கிண்டி சிறுவர் பூங்காவையும் விட்டு வைக்கவில்லை. பல ஆண்டுகளாக பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்த மரங்களை சில நிமிடங்களில் வேறுடன் சாய்த்து விட்டது வர்தா புயல். பூங்காவிலிருந்த பாதிக்கும் அதிகமான வயது முதிர்ந்த மரங்கள் விழுந்துவிட்டதால், அங்குள்ள விலங்குகளும் பாதிக்கப்படும் என சூழலியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். மரங்கள் விழுந்து கிடப்பதால், கிண்டி சிறுவர் பூங்காவே வெறிச்சோடி கிடக்கிறது. பாதிப்பு குறித்து பூங்கா நிர்வாகத்தினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த புயலால் பூங்காவில் இருந்த விலங்குகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளது சற்று ஆறுதலான விஷயம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close