[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் சந்திக்கவுள்ள மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் மனு
  • BREAKING-NEWS சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு. பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்.
  • BREAKING-NEWS 7 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் இளம்பெண் வெட்டிக்கொலை..!

girl-murder-in-chennai-bus-stand

சென்னையை அடுத்த பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில், பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்த இளம் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

நெடுங்குன்றம், கருமாரி அம்மன் கோவில், 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர், ஏ.சோனியா. தாம்பரத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். சோனியா வசித்து வந்த அதே தெருவில் வசித்து வருபவர், எஸ்.பிரசாந்த்(24). ஊரப்பாக்கத்தில் உள்ள கார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வேலை பார்த்து வருகிறார். இருவரும் ஆறு வருடங்களாக காதலித்து வந்ததாகவும், கடந்த ஒரு மாதமாக சோனியா, பிரசாந்திடம் பேசாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு சோனியா வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக, பெருங்களத்துார் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அங்கே சென்ற பிரசாந்த், சோனியாவிடம் பேச முயன்றதை அடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பிரசாந்த் தான் வைத்திருந்த பேப்பர் வெட்டும் கத்தியால், திடீரென சோனியாவின் கழுத்தை அறுத்ததில், அவர் ரத்த வௌ்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். ரத்தம் அதிகமாக வெளியேறியதில், சோனியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பிரசாந்தை விரட்டியபோது, தனது இரண்டு சக்கர வாகனத்தில் தப்பிய பிரசாந்த் பீர்க்கங்கரனை காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். தகவலறிந்த பீர்க்கங்கரனை போலீசார், சடலத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரசாந்த்தை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close