[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

மறைந்த பத்திரிகையாளர் ‘சோ’ உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி

leaders-pay-tributes-to-cho-ramasamy

மறைந்த பத்திரிகையாளர் சோ ராமசாமியின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், சினிமா பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.

துக்ளக் இதழின் ஆசிரியரும் மூத்த நடிகருமான சோ.ராமசாமி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 82. மூச்சுத் திணறல் காரணமாக கடந்த சில நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சோ ராமசாமிக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, ‌3.58 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக சோ-வுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் விஜயசங்கர் தெரிவித்துள்ளார்.

சோவின் உடல் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சோவின் உடலுக்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், தமிழக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், வானதி ஸ்ரீனிவாசன், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், சமக தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மேலும், நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், சிவக்குமார், சூர்யா, நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement:
Related Tags : Chennai cho ramasamy leaders tribute
Advertisement:
Advertisement:
[X] Close