[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத தலைமை ஜெயலலிதா.. கடந்து வந்த பாதை

jayalalithaa-life-history

இந்திய அரசியலில் தவிர்‌க்க முடியாத தலைமையாக கருதப்பட்டவர் ஜெயலலிதா என்றால் அது மிகையல்ல. அரசியலில் முத்திரை பதித்த பெண் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த ஜெயலலிதா கடந்துவந்த பாதையை பார்ப்போம்...

கர்நாடக மாநிலம் மைசூரில் ஜெயராம்-சந்தியா தம்பதியருக்கு 1948 பிப்ரவரி 24-ம் தேதி பிறந்தார் ஜெயலலிதா. அவரது மூதாதையர் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்கள். இளம் வயதிலேயே திரையுலகில் நுழைந்த ஜெயலிலதா, எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட அன்றைய முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.

1982-ஆம் ஆண்டு அதிமுகவில் தம்மை இணைத்துக் கொண்ட அவர், அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக உயர்ந்தார். 1984-ஆம் ஆண்டு ராஜ்யசபாவில் முதன் முதலில் அவர் ஆற்றிய உரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் பேசும் திறன்கொண்டவர் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயலலிதா, தமிழக அரசியலில் கருணாநிதிக்கு மாற்றான அரசியல் சக்தியாக தம்மை நிலைநிறுத்திக் கொண்டார். 1991-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக முதன் முறையாக பொறுப்பேற்றார். ஆனாலும், பல்வேறு புகார்களால் அடுத்து வந்த தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தது.

இதையடுத்து திமுகவின் 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டார். 2001-ஆம் ஆண்டு நான்கு தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. இதையடுத்து முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா, நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக பதவி விலகினார். வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலை‌யில் 2002-ஆம் ஆண்டு 3-வது முறையாக மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார்‌.

2006-ல் ஆட்சியை இழந்தாலும், மக்களின் நம்பிக்கையை சம்பாதித்து 2011-ஆம் ஆண்டு 4-வது முறையாக அவர் முதலமைச்சரானார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்ததால், முதலமைச்சர் பதவியை அவர் இழந்தார். தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த ஜெயலலிதா, வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து 5-ஆவது முறையாக முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார்.

தமிழக முதலமைச்சராக இருந்த போது பெண்களின் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்த ஜெயலலிதா, தொட்டில் குழந்தைத் திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். விளையாட்டுத்துறையின் மீது அவ‌ர் தனிக்கவனம் செலுத்தினார். அரசியல் பங்களிப்புக்காக பல்வேறு பல்கலைக் கழகங்கள் ஜெயலலிதாவுக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close