[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து
  • BREAKING-NEWS உத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

வங்கியில் முதியவர் உயிருக்கு போராடியபோது மரத்துப்போன மனிதாபிமானம்..!

social-activist-about-old-man-dead

கும்பகோணம் அருகே வங்கியில் பணம் எடுக்க சென்று உயிருக்கு போராடிய முதியவருக்கு யாரும் உதவ முன்வராதது மனிதாபிமானமற்ற செயல் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

கபிஸ்தலத்தை அடுத்த வாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர் சுப்பிரமணியன். வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்ற போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை காப்பாற்ற அவரது மனைவி அருகில் இருந்தவர்களை அழைத்த போது, அனைவரும் அதை
பொருட்படுத்தாமல் பணம் எடுப்பதிலேயே மும்முரமாக இருந்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், துடிதுடித்த பெரியவரை காப்பாற்ற வங்கி ஊழியர்கள், பொதுமக்கள் என யாரும் முன்வரவில்லை என்பது, தமிழகத்தில் மனிதாபிமானம் மிக மோசமான நிலையில் இருப்பதை உணரவைப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் கூறுகையில், வங்கிகள் போன்ற பொது இடங்களில் முதலுதவி வசதிகள் தயார் நிலையில் இருந்திருக்க வேண்டும் என்றும் அப்படி இருந்திருந்தால் இத்தகைய அசம்பாவிதம் நடக்காமல் தடுத்து இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close