[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

மழை குறித்த தேவையற்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்... வருவாய்த்துறை அமைச்சர்

revenue-minister-said-people-do-not-believe-rumors-about-flood

நாடா புயல், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளதாக மாநில வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நாடா புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையை மழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் சென்னை எழிலகத்தில் உள்ள, மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் நடைபெற்றது.

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், வருவாய்த்துறை செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், புயலை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகக் கூறினார். அவசர ‌உதவிக்கு 1077 மற்றும் 1070 என்ற எண்களுக்கு 24 மணி நேரமும் மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும், முன்ற்பாட்டு நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதால் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

பேரிடர் பகுதிகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் மின் கம்பங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close