[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

நெருங்கும் 'நாடா' புயல்... 6 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

nada-cyclone-6-district-precautionary

வட கிழக்கு பருவமழையினை முன்னிட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டுள்ளன.

சென்னை:

சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள 10 இடங்களில் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சாலையில் விழும் மரங்களை அப்புறப்படுத்தவும், தொற்றுநோய்கள் பராவமல் தடுக்கவும், கொசுக்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 40 நபர்களுடன் 4 மிதவை மீட்புப் படகுகள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் புகார்களை 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் 353 இடங்கள் மிகவும் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து பாதிப்பை சரிசெய்யவும், மரங்கள் விழுந்தால் அதை அகற்றவும் மர அரவை எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளப் பாதிப்பை தடுக்க மணல் மூட்டைகள், தொற்று நோய் பரவலை தடுக்க குளோரின் பவுடர்கள் தேவையான அளவு தயார் நிலையில் உள்ளன.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில், 7 துறைகளில் இருந்து 400 அலுவலர்கள் நியமிக்கப்பட்டும் மற்றும் நீச்சல் மற்றும் மரம் ஏற தெரிந்த செயல் வீரர்கள் என 846 நபர்கள் தயார் நிலையில் உள்ளனர். 142 ஜே.சி.பி இயந்திரங்களும், 180 நடமாடும் நீர் இறைக்கும் இயந்திரங்களும், 60 மின் அறுவை இயந்திரங்களும் மற்றும் அத்தியாவசியமான உணவுப் பொருட்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நாகப்பட்டினம்:

நாகையில் 31 குழுக்கள் அமைக்கப்பட்டு பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வதற்கும் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. மக்களை தங்க வைப்பதற்காக 18 புயல் பாதுகாப்பு மையங்கள், 7 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், 155 பள்ளிகள், 90 படகுகள் மற்றும் 4 மிதவைப் படகுகள் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் 28 புயல் பாதுகாப்பு மையங்கள் தயாராக உள்ளன. மக்களுக்கு உணவு வழங்குவதற்காக 830 மெட்ரிக் டன் அரிசி தயாராக வைக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையில் காவல்துறை மற்றும் மீன்வளத்துறை முலம் 30 குழுக்களும், சுகா‌தாரத்துறைமுலம் 25 குழுக்களும், 50 படகுகள், 100 மரம் அறுக்கும் கருவிகள் என அனைத்தும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், திண்டிவனம், வானூர், மரக்காணம் உள்ளிட்ட 12 தீயணைப்பு நிலையங்களில் உள்ள 180 தீயணைப்பு வீரர்கள் முழு நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்‌ளனர். புதுச்சேரியில் 50 ஆயிரம் பேரைத் தங்கவைக்கும் வகையில் 179 புயல் பாதுகாப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புயல் தாக்கி மரங்கள் விழுந்தால் அவற்றை உடனே அப்புறப்படுத்தும் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக மொத்தம் 16 அவசர மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close