[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

’பத்து ரூபாய் நாணயம் செல்லாது’.. நெல்லை அருகே பரவிய வதந்தி

trinelveli-rumour-spread-in-sankarankovil-that-ten-rupees-coin-demonetised

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில், பத்து ரூபாய் நாணயம் செல்லாது என வதந்தி பரவியதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்தத் தகவல் காட்டுத் தீ போல் பரவியதால், சிறு, குறு வணிகர்கள் பெட்டிக் கடை உரிமையாளர்கள் என எவரும் பத்து ரூபாய் நாணய‌த்தை வாங்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

பேருந்துக‌ளில் அந்த நாணயத்தை வாங்க நடத்துநர்கள் மறுப்பதாகவும் மக்கள் கூறி‌னர். ஆனால் திட்டமிட்டு யாரோ சிலர் இந்த வதந்தியைப் பரப்பியதாகத் ‌தெரிகிறது. செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ள தருணத்தைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் இந்த வதந்தியைப் பரப்பியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close